திங்கள், 29 டிசம்பர், 2025

உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி

உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன்

இத்தனை தனிமையான இரவில்

காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக்

கண்டபின் 

முழுதும் அமைதிகொண்டுள்ளேன்

இவ்வமைதி என்னை எதை நோக்கி

இட்டுச்செல்லுமோ?

உன் இருப்புகளின் பெருவெளியில் தேவதைகள் உண்டெனில்

ஒளியை சிறகாய் கொண்டுள்ள ஒரு தேவதையை

அனுப்பி வை

என் காதுகளில் நான் கேட்க விரும்புவது எல்லாம்

நதி கூழாங்கற்களிடம் சொல்லும் அச்சொல்லைத்தான்

இருப்புகளின் பெருக்கில் இயல்பாக

உதிர்ந்து போகும் ஒரு சொல்

பார்த்தல்

யாருமற்ற இம்மலையில்
என் குடிலின் முன் அமர்ந்து
மொத்த உலகும் பெருகுவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன்

உன்னை சுட்டும் சொல்

 என்னால் வேறேதும்
செய்ய முடியாது
சொல்லை அடுக்குகிறேன்
சொல்லை கோர்க்கிறேன்
சொல்லை சரமாக்குகிறேன்
சொல் சுட்டும் திசையில்
ஓடிச்சென்று திரும்புகிறேன்
வானம் ஒரு சொல்
கானகம் ஒரு சொல்
மழையும் மலையும்  ஒரு சொல்
சொல்லாகாத ஏதுமில்லை மண்ணில்
தொன்மையான சொல்லொன்று 
குழைந்து வளைந்து
சொடுக்கி வெடித்து மறைந்தபின்
நீ எதிரொலிக்கிறாய் அகத்தில்


உரைபவன்

இதுவல்ல இதுவல்ல
என விலக்கச்சொன்னால்
இவளை
எப்படி நான் விலக்குவது?
இம்மாவிருட்சமும்
இது பிறந்த வந்த சிறுவிதையும்
இவ்விதைக்குள் உரையும் உயிர்துடிப்பும்
எல்லாம் இருக்கட்டும்
நான் மலரைப் பாடிக்கொள்கிறேன்
இதிலெல்லாம் உரைகிறான்
இவளில் அத்தனை அழகாய்
உரைகிறான் அவன்


உதிர்ந்து செல்லும் சொல்

 சுற்றி சுற்றி உன்னைத்தான் பற்றிக்கொள்கிறேன் இத்தனை தனிமையான இரவில் காலம் பிரம்மாண்டமாய் கிடப்பதைக் கண்டபின்  முழுதும் அமைதிகொண்டுள்ளேன் இவ்...