சனி, 25 நவம்பர், 2023

ஒரு பழுத்த இலை
விழுகிறது
அந்தியின் மஞ்சள் நிறத்தில்
சாம்பல் நிறப்
பறவையொன்று
கண்ணுறுகிறது
விழும் அந்தியை
அந்தி தரை தொடுவதற்குள்
வந்து கவிந்துவிட்டது
இரவின் பெருஞ்சிறகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஜனனம் மரணம்

அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?