சனி, 25 நவம்பர், 2023

அந்தப் புலரியின்
நிறப் பிரளயத்தின்
முன்
உயிரற்று
நிற்கையில்
தூரத்துப் பறவைக்குரல்
விடுவித்தது
நிறத்தை சுழித்து
கலவையாக்கும்
கண்ணீர்த்துளிகளை

மாலையை
வழியனுப்ப வந்த
சிறுமியின்
கண்களில்
மிகச் சின்னதாய்
ஒரு சிறு‌உலகமும்
அதில் ஒரு துளியாய்
நீர்மையில் நிறம்கரையும்
புள்ளியென
சூரியனும்

ஒரு பழுத்த இலை
விழுகிறது
அந்தியின் மஞ்சள் நிறத்தில்
சாம்பல் நிறப்
பறவையொன்று
கண்ணுறுகிறது
விழும் அந்தியை
அந்தி தரை தொடுவதற்குள்
வந்து கவிந்துவிட்டது
இரவின் பெருஞ்சிறகு

திங்கள், 31 ஜூலை, 2023

திங்கள், 10 ஜூலை, 2023

சிருஷ்டியின் போக்கு

அதலம், விதலம், சுதலம், தராதலம், ரசாதலம், மகாதலம், பாதாளம் - நம் காலுக்குக்கீழிருக்கும் ஏழு லோகங்கள் இவை. நம் மனதிற்குள்ளும் இத்தனை லோகங்களும...