ஒரு கணம்
ஏதுமற்றுஇப்பெருங்காலையை மட்டும்
அறிவோம்
ஒரு கணம்
எல்லாம் உதிர்த்து
நம்மை நாம்
நோக்கிக்கொள்வோம்
ஒரு கணம்
கண்கள் மூடி
ஆழச்சுனையில்
நீராடும் சிறுமலரின்
மென் மணம்
உணர்வோம்
ஒரு கணம்
அநாதி காலம்
முடிவிலியின் கண் இமைப்பு
நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக