திடுதிப்பென்றோ
தடதடவென்றோபடபடப்பாகவோ
முந்தும் வெறியுடனோ
வெல்லும் ஆசையுடனோ
கொள்ளும் இச்சையுடனோ
எதையும் செய்ய வேண்டாமே
ஒரு மலரைப் பார்த்தபடியே
அந்தியைக் கடப்பதுபோல்
இந்த சீன்னூண்டு காலத்தைக்
கடந்துவிடலாமே
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக