செவ்வாய், 19 ஜனவரி, 2021

காவியம்

மழுங்கிய வாட்களால்
நாம் ஆடும்
இந்நீள் யுத்தத்தில்
கழுத்துகள் அறுந்தோடவில்லை
குருதி பெறுக்கெடுக்கவில்லை

கொல்லும்‌துணிவின்றி
வாளுதறி இருகப்புல்லும்
அன்பின் முழுமையின்றி
நீள்கிறது
நீள்கிறது
போர்

எல்லாம் கூர்கொண்டு
முழுதமைந்து
முழுக்குருதியும்
அன்பின் முழுக்கண்ணீரும் சிந்தப்பட்டதெல்லாம்
யாரோ ஒருவன்
தீட்டிய
அம்மாபெரும் ஓவியத்தில்
மட்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நகரம் உயிர் நீங்கும் விலங்கைபோல் உச்ச விசையில் துடித்துக்கொண்டே இருந்தது பெருஞ்சாலையெங்கும் கிளையும்‌இலையும் சேறுமாய் அடித்துச்செல்லும்...