Saturday, January 16, 2016

அழிவின் தீவிரம் (Melancholia)

MELANCHOLIA- 1. Deep sadness or Gloom
                                2. Clinical depression, characterized by irrational fears, guilt and apathy

நண்பன் அச்சுதன், அரை ட்ரவுஸருடன் கணிணி முன்னிருக்கும் சேரில் சரிந்து அமர்ந்து கொண்டு வலது கையால் மவுஸை பிடித்த்துக்கொண்டு, சிறு சிறு கட்டங்களை திரையில் வரைந்தபடி, அவனுடைய ஸ்க்ரீன்ஸேவரைக் காண்பித்தான். 
மெலன்கோலியா படத்தில் வரும் காட்சியை- இரவில் ஒரு பக்கம் நிலவும் மறு பக்கம் அந்த மெலன்கோலியா ப்ளானட்டும் நடுவில் பெண் ஒருவள் நின்றிருக்கும் காட்சியை- ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அவன் கண்ணினியில் ஸ்க்ரீன்ஸேவராக வைத்திருந்தான். அதைக் காண்பித்து “அங்க பாரு என்ன மாதிரி ஸீன் தெரியுமா இது?” என்பான். நினைத்து பார்க்க முடியாத பேரழிவு, நாம் நினைப்பது நினைக்காத்து எல்லாம் ஒரு பொறுட்டேயல்ல என்பது போல் நம்மை அணுகும் கணம் அந்த ப்ரேமில் பதிவாகியிருக்கும். மானுடம் அவ்வழிவுக்கு.... அழிவல்ல....அழிவு என்பது மானுடக் கண்களில், அந்த இயக்கம்...ஆம் இயக்கம் தான் சரியான வார்த்தை.. அப்பேரியக்கத்தின் முன்பாக மொத்த மானுடமும் சிறுத்து காற்றில் திரியும் தூசு. வரவிருக்கும் சர்வ நாஸத்தை முன்னரே உணர்ந்து கொள்கிறாள் நாயகி. மானுடம் அடையப்போகும் அழிவை தெரிந்த்துகொண்டவள், மானுடம்வரைந்திருக்கும் எல்லைகளைக் கடக்கிறாள். அன்று மணமான தன் கணவனுடன் உடலுறவுக்கு மறுக்கிறாள். தன்னை அழைக்க வரும் பணியாளன் ஒருவனை நடு மைதானத்தில் புணர்கிறாள். நடு மைதானத்தில் அமர்ந்து சிறுநீர் கழிக்கிறாள். இப்படி வரம்பில்லா செயல்கள் யாவும், அவள் மனதில் வரம்புகள் அர்த்தமற்றுப்போனதன் விளைவு. 

உருவகக் காட்சிகள் ஏராளம். படத்தின் தொடக்கமே நாயகியின் காய்ந்து வெடிக்கக் காத்திருக்கும் நிலம் போன்ற உணார்ச்சியற்ற வெளிறிய முகம், பின்புலத்தில் பறவைகள் இறந்து விழுகின்றன. பூமியை மெலன்சோலியா கிரகம் மோதும் காட்சி. குதிரை ஒன்று சரிந்து விழும் காட்சி. இலைகள் உதிரும் காட்சி. இதெல்லாவற்றுடனும் வயலின் இசை. மெலங்கோலிக் இசை. உருவகக் காட்சிகளை உடைத்துப் பார்த்து அர்த்தம் சொல்லுவதில் பயனில்லை. அந்த இசையுடன் சேர்ந்து அக்காட்சி உருவாக்கும் அதிர்வலைகளே போதும். எனக்குக் குறிப்பாக ரொம்பவும் பிடித்த காட்சி, நாயகி திருமண உடையுடன் கையில் பூச்செண்டுடன் நடக்க முயல, அவள் கால்கள் குவியலான கருமை நிற ஜவ்வு போன்ற ஏதோ ஒன்றுடன் பிணைந்திருக்கும். இயல்பையும் கனவையும் அறியாமையையும் நினைவுறுத்துகிறது.



மொத்த கதையும் ஒரு பெரிய எஸ்டேட் பில்டிங் போன்றொரு ஒதுக்குப்புறாமான வீட்டிற்குள் நிகழ்ந்துவிடுகிறது. நாயகி அவள் அக்காவுடன் தங்கியிருக்கிறாள். அக்காவின் கணவன், மனைவியை குழந்தையை மெலன்கோலியா பற்றி அறிய இடம் கொடாமல் பார்த்துக் கொள்கிறான். அந்த கிரகம் பூமியை நெருங்கி வந்து விலகிவிடுமென்று கூறி வருகிறான். அதேபோல் கிரகம் நெருங்கி வந்து விலகிவிடுகிறது. ஓரிரவு கடந்து தூங்கி எழுகையில், அக்கிரகம் பூமியை அணுகி வரத்தொடங்க்குகிறது. கணவன் குதிரை லாயத்தில் தற்கொலை செய்து கொள்கிறான். அக்கா தன் குழநையுடன் தப்பித்து அருகிலிருக்கும் டவுனுக்குள் செல்வதான எளிய மானுட அறிவுடன் செயல்படுகிறாள். அச்சமும் அழுகையும் பீடித்தவளாக குழந்தையுடன் அங்கு மிங்கும் ஓடி ஒரு வழியுமின்றி வீடடைகிறாள். நாயகி இவ்வளவுக்கும் இடையில் சலனமின்றி இருக்கிறாள். தன் அக்காவின் மகனை அமைதிபடுத்த, குகை ஒன்றை தயார் செய்து அதனுள் அமர்ந்து கொண்டாள் போதுமென்றும் தப்பித்துவிடலாம் என்றும் நம்பிக்கை அளிக்கிறாள். ஒரு மேடான பகுதியில், நாலைந்து ஆள் உயர குச்சிகளை ஒன்றாக குவித்து நிறுத்தி, அதனிடையில் அமர்ந்து கொள்கிறார்கள். மூவரும் கைகோர்த்து அமர்ந்திருக்க, பின்புலத்தில் பிரம்மாண்டமாய் மெலன்கோலியா அணுகி நெருங்கி உலகம் அழிகிறது.



மெலன்கோலியா என்பதன் அர்த்தம் ஆழ்ந்த துக்கம். அவ்வார்த்தையையும் கடந்து படம் உயிரச்சத்தை விதைக்கிறது. நாம் எதைச் சார்ந்திருக்கிறோமோ, நாம் எதன் அங்கமோ, தத்துவம், அறிவியல் அன யாவும் எதன் கருவியோ, அது அர்த்தமிழக்கிறது. மானுடமில்லாது, பிரபஞ்ச வெளியில் மிதக்கப்போகும் உலகம் பற்றிய கற்பனை பெறும் வெறுமையை உமிழ்கிறது. 

2 comments:

  1. Good one. U keep asking others, "what is the purpose of life". I would like to know, are u of the mind that there is no purpose to life and we are insignificant in this universe. Or do u believe that there is a purpose and we should look for it?

    ReplyDelete
  2. to ur question..if i am able to convincing answer to the whole humanity, this year they gotta give me the noble price for philosophy. however wat i am giving here is my perspective and its a long one. (it ends with question again however there is a partial answer to ur question)
    1. wen we compare a single humans life span with infinite time... oops one cannot say anything. the whole humanity has no meaning at this point. we r like a ball rolling towards some destiny that we dont know.. really wats the purpose of humans? i dont know. or i can put it like this. the whole humans are part of a universe. universe affects humans and human actions affects the universe.this goes on... towards where? dont know
    2.looking at the small span of life a human have on this earth- an individual gotta do sthng in the society in wich he lives in. like many parts joins together and works together to run a car, every human is a part of a humanity. for the survival of it he must function... and this function is the purpose of life
    3. so putting the above two points togther, evry human he himslef the universe and also a part of it... just like a bolt in car.
    4. watevr one does to the humanity is the purpose of life. let it be any kinda work, that contributes to huamnity. we r contributing to a bigger entity wich rolls like a ball toawards unknown destiny.

    wats this unknown destiny?

    theist : simple, its god u mother fucker. watver u does in the name of pirpose of life is gods work. it service for god. just do it.

    intellectual : i really dont know, and i really want to know wat it is.. and i will keep looking contributing my part to the universe. i just cannot accpet god. i am being driven by the insatiable longing to know the truth.

    scientist : i am full of questions. i am being driven by the insatiable longing to know the truth.

    so thats it.

    ReplyDelete

அந்தப் புலரியின் நிறப் பிரளயத்தின் முன் உயிரற்று நிற்கையில் தூரத்துப் பறவைக்குரல் விடுவித்தது நிறத்தை சுழித்து கலவையாக்கும் கண்ணீர்...