திங்கள், 9 ஜூன், 2025

சுடரின் நா நுனி
வெளியை
சுவைக்கிறது
வெளியின் நுனி விரல்
சுடரை‌ அலைக்கிறது
மனிதர்கள் பிராத்திக்கிறார்கள்
தம் தம் சுடரிடம்
சூரியனை ஏற்றிச்‌சென்ற
கரம் எதைப் பிராத்தனை செய்தது
எது அருள
பெருகிற்று இப்பெருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பெரும் சதுப்பு அசைவறுத்த முதலை அசைவில்லாத பறவை அசைவற்ற நீரில் மிதக்கும் அசைவேதுமற்ற சிறு பூச்சி சதுப்பின் ரீங்காரம் ஊன்றிய கால் வழி ...