சுடரின் நா நுனி
வெளியைசுவைக்கிறது
வெளியின் நுனி விரல்
சுடரை அலைக்கிறது
மனிதர்கள் பிராத்திக்கிறார்கள்
தம் தம் சுடரிடம்
சூரியனை ஏற்றிச்சென்ற
கரம் எதைப் பிராத்தனை செய்தது
எது அருள
பெருகிற்று இப்பெருக்கு
அடங்கும் ஒவ்வொரு அகலும் அதன் புகையும் கனவில் காண்பது எதனை? சிறு சொட்டாய் துளிர்க்கும் சுடரில் ஒளிரும் கனவு எது?