Wednesday, August 3, 2022

மழைப்பறவைகள்
ஆகாசச் சிறகடிக்கின்றன
பூமி மெல்ல
எழுகிறது
ஏன் எது என்ற
திசையின்றி
கேள்வியன்றி
ஒளி சென்றமைகிறது
ஆயிரமாயிரம்
அண்டம் நிறைத்து
ஒழுகும்
மழைத்துளிகளில்

உயர உயரப் பறக்கும் பறவையைக் காணவும் நரம்பொன்று அறுந்து விழுந்தது சுற்றிப் பெருகும் நகரின் பதைக்கும் குரல்கள் கேளாதானேன் நீரில் மிதக்க...