உன் முன்
ஒரு துளி
அனலை வைக்கிறேன்
ஒரு துளி பனி
ஒரு துளி இரவு
ஒரு துளி கண்ணீர்
ஒருதுளி புன்னகை
ஒரு துளி தயக்கம்
ஒரு துளி காதல்
ஒரு துளி மலர்
ஒரு துளி உதயம்
ஒரு துளி மழை
ஒரு துளி ஆசை
ஒரு துளி வெறுப்பு
ஒரு துளி ஆனந்தம்
ஒரு துளி சலிப்பு
ஒரு துளி பெண்மை
ஒரு துளி ஆண்மை
ஒரு துளி குழந்தைமை
ஒரு துளி நட்பு
ஒரு துளி உறவின்மை
ஒரு துளி வானம்
ஒரு துளி இல்லம்
ஒரு துளி காமம்
ஒரு துளி ஆதரவு
ஒரு துளி கைவிடுதல்
ஒரு துளி துரோகம்
ஒரு துளி பொய்
ஒரு துளி கொலை
ஒரு துளி இரத்தம்
ஒரு துளி வஞ்சம்
ஒரு துளி தத்தளிப்பு
ஒரு துளி நிலைகொள்ளல்
ஒரு துளி மரணம்
ஒரு துளி வாழ்க்கை
ஒரு துளி சரணைடைதல்
ஒரு துளி கனவு
ஒரு துளி வானவில்
ஒரு துளி அழகு
ஒரு துளி கோரம்
ஒரு துளி கீழ்மை
ஒரு துளி ஊடல்
ஒரு துளி பிரிவு
ஒரு துளி தனிமை
ஒரு துளி முதல் முத்தம்
ஒரு துளி கடைசி முத்தம்
ஒரு துளி விடைபெறல்
ஒரு துளி மறதி
ஒரு துளி நினைவின்மை
ஒரு துளி உருமாற்றம்
ஒரு துளி ஆழம்
ஒரு துளி சலனம்
ஒரு துளி கடத்தல்
கடலிலிருந்து
எழும் அலைத்துமிகள்
கடலினதே அல்லவா?