Friday, May 14, 2021

அதிகாலை
ஒரு மென்மொட்டுப்
புன்னகயுடன்
கண்மலரும்
குழந்தை

அதிதூரத்து
கதிரொளியில்
பூக்கும் சிறு மென்மலர்
மலரலுங்காமால் ஆடும்
பட்டுபுச்சியின் வண்ணங்கள்
வண்ணங்களைக் கண்டு
துள்ளி ஆடும்
சிறு நாய்க்குட்டி
கொக்குக்கு முது காட்டி
சேற்றில் புரளும் எறுமை
பேசிவிட்டு ஓடித்துரத்தும்
அணில்
இன்னும் மறுபக்கம்
சென்றிராத நிலவு
அதிதூரத்தில் ஒரு நட்சத்திரம்
மழைத்தேக்கத்தில் கண்ணறியா
கோடி உயிர்கள்

கணம்‌ கணமும்
ஓம் ஓம்
என எழுகிறது யாவும்

No comments:

Post a Comment

எனது படைப்புகள்

சொல்வனத்தில் வெளியான எனது சிறுகதைகள், லீலாதேவி அப்பால் பூரணம் திருநடம் படைத்தல் திருக்கூத்து உள்ளிருத்தல் யானை வெரூஉம் வெந்துயர்க் கோடை உதிர...